உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நகராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மணிகுண்டு திடலில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மையை பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பேரணியை நகராட்சி ஆணையர் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும், இயற்கை வளங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, நகர மன்ற அலுவலக வளாகத்தில் ஆணையர் திவ்யா மரக்கன்று நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment