உளுந்தூர்பேட்டை, சி.ஐ.டி.யு சிறு வியாபாரிகள் சங்க பெயர் பலகை திறப்பு - மே தின கொடியேற்று விழா. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 May 2026

உளுந்தூர்பேட்டை, சி.ஐ.டி.யு சிறு வியாபாரிகள் சங்க பெயர் பலகை திறப்பு - மே தின கொடியேற்று விழா.

 


உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலைய சிறு வியாபாரிகள் சங்கத்தின் சி.ஐ.டி.யு இணைப்பு சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் மே தின கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

 

சி.பி.எம் நகரச் செயலாளர் பி.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலைய சிறு வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.ராஜேந்திரன் புதிய பெயர் பலகையை திறந்து வைத்து, மே தின செங்கொடியை ஏற்றி வைத்தார்.

  

இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.சேகர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஏ.தேவி, வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஏ.கஸ்தூரி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.சுரேஷ், நகரக் குழு உறுப்பினர்கள் கே.தங்கராசு, ஷேக்சாலாவுதீன், டி.ராஜி, ஏ.கே.முருகன், என்.சண்முகம், அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் ஏராளமான சிறு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


சிறு வியாபாரிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தொழிலாளர் ஒற்றுமையை வலுப்படுத்தவும் சி.ஐ.டி.யு சங்கம் தொடர்ந்து போராடும் என நிகழ்ச்சியில் பேசிய தலைவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.


செல்வகுமார் 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிபரப்பாளர்

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad