உளுந்தூர்பேட்டை அருகே 140-ஆவது மே தின விழா.சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் கொடியேற்றிவைத்தார். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 May 2026

உளுந்தூர்பேட்டை அருகே 140-ஆவது மே தின விழா.சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் கொடியேற்றிவைத்தார்.

 


உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான 140-ஆவது மே தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

  

சி.பி.எம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர், 8 மணி நேர வேலை, நியாயமான கூலி, வேலை உத்தரவாதம் ஆகியவற்றுக்காக உயிர் தியாகம் செய்த சிகாகோ தியாகிகளின் வரலாற்றை நினைவுகூர்வோம். இன்றைய சூழலில் தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப் போகின்றன. உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டம் அவசியம் என்று வலியுறுத்தினார்.  

திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் டி.ராஜீவ்காந்தி ஆகியோர் தலைமையில் இந்த மே தின நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

  

இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜே.டார்வின், கிளைத் நிர்வாகிகள் கே.ஆறுமுகம், எஸ்.முத்துபாண்டியன், ஆர்.முத்தழகன், அருண்குமார், எஸ்.கோகுல், ஏ.கஸ்தூரி, பி.ஆண்டாள், ஆர்.அஞ்சலை, ஏ.அலமேலு உள்ளிட்ட கட்சி தோழர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மே தின உறுதிமொழி ஏற்றனர்.


நிகழ்ச்சியின் இறுதியில் ஏ.வேல்முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார். "உழைப்போம், ஒன்றுபடுவோம், போராடுவோம்" என்ற முழக்கத்துடன் விழா நிறைவுற்றது.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad