உளுந்தூர்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் 37-வது ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 30 April 2026

உளுந்தூர்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் 37-வது ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உள்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் 37-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.


இந்த ஆலயத்தில் சுமார் 11 அடி உயரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அங்காளபரமேஸ்வரி அம்மனை தரிசிக்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டனர். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.


விழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தைச் சேர்ந்த யத்தீஸ்வரி ஆத்மபிரியா அம்பாள் அவர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்குகள் ஏற்றி, குடும்ப நலன் மற்றும் சமூக அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர்.


பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆன்மிக உற்சாகத்துடன் அம்மனை வழிபட்டு, விழாவை சிறப்பித்தனர். விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தி இசைகள் ஒலித்ததால் ஆன்மிகச் சூழல் நிலவியது.


விழா ஏற்பாடுகளை சித்ரா பௌர்ணமி குழுவினர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர்  பக்தர்கள் இணைந்து சிறப்பாக மேற்கொண்டனர். சித்ரா பௌர்ணமி விழா ஆண்டுதோறும் இவ்வூரில் மக்களின் ஆன்மிக நம்பிக்கையை வலுப்படுத்தும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்

No comments:

Post a Comment

Post Top Ad