கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள பெஸ்கி மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும், பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் பெருமக்கள் மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் பிள்ளைகள் சாதனை புரிந்ததற்கு பெருமை கொள்வதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து அளித்து வரும் சிறந்த கல்வி வழிகாட்டுதலின் பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாராட்டினர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment