214 மாணவர்களும் தேர்ச்சி பெற்று கல்வித் துறையில் புதிய மைல்கல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. தேர்வில் பங்கேற்ற 214 மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி பெற்றிருப்பது பள்ளியின் கல்வித் தரத்தையும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
பள்ளியின் முதல் மாணவராக ஜே. ஹர்ஷாந்த் ராஜன், 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து பெருமை சேர்த்தார். இரண்டாம் இடத்தை ஜி. அஞ்சலி, 589 மதிப்பெண்களுடன் பெற்றார். மூன்றாம் இடத்தை வி. குருபிரணேஷ் மற்றும் ஆர். லட்சுமி நாராயணன், தலா 587 மதிப்பெண்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பள்ளி மாணவர்களின் மொத்த தேர்ச்சி முடிவும் சிறப்பாக அமைந்துள்ளது. அதன்படி, 590க்கு 1 மாணவர், 580க்கு மேல் 10 மாணவர்கள், 570க்கு மேல் 17 மாணவர்கள், 550க்கு மேல் 41 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல் 500க்கு மேல் 99 மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருப்பதும் பள்ளியின் கல்வித் திறமையை வெளிப்படுத்துகிறது.
இந்த அபார வெற்றியால் பள்ளி வளாகம் முழுவதும் மகிழ்ச்சி நிலவியது. பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என வாழ்த்துகள் கூறினர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறந்த தேர்ச்சி முடிவுகளைப் பெற்று வரும் ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி, இவ்வாண்டும் 100% தேர்ச்சி பெற்று கல்வித் துறையில் முன்னணி பள்ளியாக திகழ்கிறது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment