குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2026-2027 கல்வியாண்டில், கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளிகளில் RTE கோட்டாவின் கீழ் LKG சேர்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் LKG வகுப்பில் வாய்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு 18.05.2026 வரை http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் நடைபெறுகிறது. 01.08.2022 முதல் 31.07.2023 வரை பிறந்த குழந்தைகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பள்ளியிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
மாணவரின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவையான ஆவணங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment