உளுந்தூர்பேட்டை பகுதியில் நாளை மின்தடை குமாரமங்கலம் மின்பாதையில் அவசர பராமரிப்பு பணிகள். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 May 2026

உளுந்தூர்பேட்டை பகுதியில் நாளை மின்தடை குமாரமங்கலம் மின்பாதையில் அவசர பராமரிப்பு பணிகள்.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் நாளை 15.05.2026 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.


உளுந்தூர்பேட்டை 110/33-11 கி.வோ துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.வோ குமாரமங்கலம் மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த மின்தடை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் உளுந்தூர்பேட்டை அன்புநகர், காட்டுநெமிலி, பள்ளியந்தாங்கல், நாச்சியார்பேட்டை, பு.கிள்ளனூர், அ.குறும்பூர், மூலசமுத்திரம், ஒலையனூர், குணமங்கலம், வெள்ளையூர், கணையார், குமாரமங்கலம், ஆர்.ஆர்.குப்பம், நத்தகாளி மற்றும் ஏமம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.


பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தியாவசிய அல்லது அவசர பணிகள் இருந்தாலொழிய இத்தேதியில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை உளுந்தூர்பேட்டை இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயற் பொறியாளர் பொறுப்பு எம். கணேசன் வெளியிட்டுள்ளார்.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad