உளுந்தூர்பேட்டை | பிப்ரவரி 17:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உபகோட்டம் நகரப் பிரிவில், வீட்டு மின் இணைப்பின் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்த மின் நுகர்வோருக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக பெயர் மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. மின் இணைப்பு பெயர் மாற்ற உத்தரவை உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் வழங்கினார். விண்ணப்பித்த உடனேயே உத்தரவு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்த மின் நுகர்வோர், மின்சார வாரியத்திற்குத் தனது நன்றியை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இளநிலை பொறியாளர்கள் முருகன், முஸ்தபா, முரளி, முகவர் ரங்கராஜன், வணிக ஆய்வாளர்கள் கணபதி, பத்மநாபன், வணிக உதவியாளர் முருகன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்: D.செல்வம்
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.jpg)
No comments:
Post a Comment