உளுந்தூர்பேட்டை, பிப். 03:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பியூலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாபெரும் உணவு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பள்ளியின் முதல்வர் கிஷோர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த உணவு திருவிழா, பள்ளியின் அனைத்து துறை ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கேழ்வரகு, கம்பு, திணை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள், பல்வேறு பழ வகைகள், காய்கறி சார்ந்த உணவுகள் மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய உணவு வகைகள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டன.
திருவிழாவின் முக்கிய அம்சமாக, மாணவர்கள் ஒவ்வொரு உணவு வகையின்
-
சத்தான தன்மை,
-
நன்மை–தீமைகள்,
-
அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய உணவு பழக்கங்கள்
குறித்து பார்வையாளர்களுக்கு தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கினர். மாணவர்களின் தன்னம்பிக்கையான விளக்கங்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் அனைத்து துறை ஆசிரியர்கள், மனிதம் காப்போம் அறக்கட்டளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் செல்வா, ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
இந்த உணவு திருவிழா, மாணவர்களிடையே ஆரோக்கிய உணவின் முக்கியத்துவம், சிறுதானியங்களின் அவசியம், பாரம்பரிய உணவு கலாச்சாரம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது என பங்கேற்றோர் பாராட்டினர்.
.jpg)
No comments:
Post a Comment