கள்ளக்குறிச்சி, பிப்.23:
தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாத் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 11,09,911 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
தொகுதி வாரியான வாக்காளர் விவரம்:
1. கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
ஆண்கள் – 1,37,649
பெண்கள் – 1,41,044
மூன்றாம் பாலினத்தவர்கள் – 69
மொத்தம் – 2,78,762
2. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி
ஆண்கள் – 1,35,292
பெண்கள் – 1,35,198
மூன்றாம் பாலினத்தவர்கள் – 51
மொத்தம் – 2,70,541
3. சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி
ஆண்கள் – 1,30,231
பெண்கள் – 1,32,859
மூன்றாம் பாலினத்தவர்கள் – 46
மொத்தம் – 2,63,136
4. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி
ஆண்கள் – 1,48,929
பெண்கள் – 1,48,499
மூன்றாம் பாலினத்தவர்கள் – 44
மொத்தம் – 2,97,472
இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலர்களின் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை சீருடனும் வெளிப்படையாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment