உளுந்தூர்பேட்டை, பிப்.28:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி பகுதியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு கல்லூரி வளாகத்தில் Indian Bank சார்பில் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ஏடிஎம்) திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் டாக்டர் கே. ஜெயராமன் தலைமை தாங்கினார். சாரதா கல்லூரியின் அம்பா அமயப்ரியா, பிரேம்பிரண மாஜி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஏடிஎம் இயந்திரத்தை பத்தாம் படை காவலர் பயிற்சி கமாண்டர் முருகேசன் மற்றும் இந்தியன் வங்கியின் துணை மண்டல அலுவலர் எம். பாலமுருகன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் டாக்டர் ஜே.எஸ்.ஏ. அருண், நிர்வாக செயலாளர் டாக்டர் கண்மணி, நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன், முதல்வர் பிருந்தா, முன்னாள் இயக்குநர் நடராஜன், தீயணைப்புப் படை காவலர்கள், பாலி ஊராட்சி மன்ற தலைவர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த ஏடிஎம் வசதி மூலம் மாணவர்கள் மற்றும் சுற்றுப்புற மக்கள் எளிதில் வங்கி சேவைகளை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
.jpg)
No comments:
Post a Comment