உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மகிழ்ச்சி கொண்டாட்டம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 January 2026

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்.


உளுந்தூர்பேட்டை, ஜன. 23:


தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய விசில் சின்னத்தை வரவேற்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான மகிழ்ச்சி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு கழகத்தின் சின்னமான விசில் சின்னம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் நகர செயலாளர்கள் விஜய் செல்வா, மெர்சல் கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், அஜய்குமார், பாரத் பிரகாஷ், கண்ணன், சதீஷ், மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், ஊடகப் பிரிவு மணிகண்டன், நகர நிர்வாகிகள் விஜய், அருண், சுகனேஷ், மணிவண்ணன், கதிரவன், அண்ணாமலை, கவிதா, ஜெயக்குமார், பாலா, ஹரிதாஸ், சிந்தனைச் செல்வன், கதிர், தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான தொண்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் உரையாற்றிய நிர்வாகிகள், விசில் சின்னம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை தெரிவித்ததுடன், தமிழகத்தில் மாற்றத்திற்கான அரசியல் பயணத்தில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியுடன் செயல்படும் என்றும் கூறினர். இந்த மகிழ்ச்சி கொண்டாட்ட நிகழ்வால் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் உற்சாகமும் பரபரப்பும் நிலவியது. 

No comments:

Post a Comment

Post Top Ad