உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற 508 திருவிளக்கு பூஜையில் உலக நன்மைக்காக பக்தர்கள் திரளான பங்கேற்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 January 2026

உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற 508 திருவிளக்கு பூஜையில் உலக நன்மைக்காக பக்தர்கள் திரளான பங்கேற்பு.


உளுந்தூர்பேட்டை, ஜன. 23:


இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், இருள் நீக்கி இன்பம் நல்கும் அம்மை எனப் போற்றப்படும் அருள்மிகு காமாட்சி அம்மை சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், உளுந்தூர்பேட்டையில் உலக நன்மை, மக்கள் நலன் மற்றும் ஆன்மீக ஒற்றுமையை வேண்டி 508 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.


இந்த திருவிளக்கு பூஜைக்கு ஸ்வாமி அனாந்தானந்தஜி மகராஜ், தலைமை சுவாமிஜி, ஸ்ரீ இராமகிருஷ்ணா ஆஸ்ரமம், உளுந்தூர்பேட்டை அவர்கள் தலைமையேற்று அருளுரை வழங்கினார். ஆன்மீக ஒழுக்கம், மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமை குறித்து அவர் ஆற்றிய உரை பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ. மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் கே. திருநாவுக்கரசு, நகர மன்ற துணைத் தலைவர் உ.சி. வைத்தியநாதன், நகர மன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தலைவர் க. ஜெயசங்கர், நகர மன்ற உறுப்பினர் த. செல்வம் டேனியல் ராஜ், பெருமாள் கோவில் அ.கா. துறை தலைவர் க. சிவராஜ், முருகன் கோவில் அ.கா. துறை தலைவர் மு. செல்லையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, திருவிளக்கு பூஜையில் பங்கேற்று மக்களின் நலன் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.


முன்னதாக, வேத மந்திரங்கள் முழங்க அம்மை மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 508 திருவிளக்குகள் ஏற்றப்பட்டு, பெண்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தீபாராதனை செய்தனர். ஆலயம் முழுவதும் தீப ஒளியால் பிரகாசித்து ஆன்மீக சூழல் நிறைந்தது.


இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குடும்ப நலன், சமூக அமைதி மற்றும் உலக சமாதானம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியை விழாக்குழுவினர் க. நடராஜன், சௌ. இராமலிங்கம், குணசேகரன், அமிராமி மோகன், கோதண்டபாணி, அருணாச்சல ரெட்டியார், அம்பிகாபதி, ராமச்சந்திரா சங்கர், கேசவன் எழுமலை, ரைஸ் மில் மோகன், ராமசாமி ஆசிரியர், த.மு. அன்பழகன், ஆட்டோ புருஷோத்தமன், சரண் ராஜ், மணி, முருகன், பா. மனோபாலன், கிருஷ்ணமூர்த்தி செட்டியார், வி.என்.எஸ். ராஜராஜன், ஆட்டோ சிவா, ஆர்.எஸ். முருகன், ஆ. ஸ்ரீராம், நாராயணேஸ்வரி, சரவணன் உள்ளிட்டோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.


மேலும், அறங்காவலர் குழு தலைவர் க.ஜெ. பிரகாஷ் ஜெயசங்கர் தலைமையில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் என். இரமேஷ்பாபு மற்றும் சரஸ்வதி வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad