உளுந்தூர்பேட்டை – ஜனவரி 11
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ சாரதா ஆசிரமத்தின் விவேகானந்தா சேவா பிரதிஷ்டன் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், விவேகானந்த சேவா பிரதிஷ்டன் இயக்குனர் யத்தீஸ்வரி, ஆத்ம விகாச பிரியா அம்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 120 பேருக்கு பொங்கல் புத்தாடைகளை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் புஸ்ரா, நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, அவர்களிடையே மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment