தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அகில பாரத இந்து மகா சபா ஆதரவு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 January 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அகில பாரத இந்து மகா சபா ஆதரவு.


உளுந்தூர்பேட்டை – ஜனவரி 12:


வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கு அகில பாரத இந்து மகா சபா முழு ஆதரவு வழங்கும் என அந்த அமைப்பின் மாநில தலைவர் பெரி.செந்தில் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக தமிழகமெங்கும் அகில பாரத இந்து மகா சபா தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அகில பாரத இந்து மகா சபாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற சந்திப்பு கூட்டத்தில், மாநில தலைவர் பெரி.செந்தில் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அமைப்பின் அரசியல் நிலைப்பாடு, எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெரி.செந்தில், வரும் 20-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ள அகில பாரத இந்து மகா சபாவின் அகில இந்திய தலைவர் நந்தகிஷோர் மிஸ்ரா அவர்களை வரவேற்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் சென்னைக்கு திரண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.


மேலும், தைப்பூசம் திருநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் நிச்சயமாக தீபம் ஏற்றப்படும் என்றும், இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார். இந்த நிகழ்வு ஆன்மிக உணர்வையும் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமையும் என அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் கூட்டத்தில் அகில பாரத இந்து மகா சபாவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad