உளுந்தூர்பேட்டை, ஜன. 12:
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், திருக்கோவிலூர் சரகத்திற்குட்பட்ட உளுந்தூர்பேட்டை ஐ.ஐ.66 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் தலைமையேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில், கூட்டுறவு துறை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய அடித்தளமாக விளங்குகிறது என்றும், சமத்துவம், ஒற்றுமை, சமூக நீதியை வலியுறுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சங்க செயலாளர்கள் பாண்டியன், குமார், ஆறுமுகம், ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கூட்டுறவு துறை அலுவலர்கள், சங்க பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

No comments:
Post a Comment