திருவெண்ணெய்நல்லூர் அருகே மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவித்தொகை, மிதிவண்டி வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 January 2026

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவித்தொகை, மிதிவண்டி வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்.


திருவெண்ணெய்நல்லூர் | ஜனவரி 10:


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ரூ.5,000 உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகளுக்கான மிதிவண்டியும் வழங்கப்பட்டது.


இந்த மனிதநேய சேவை நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.பரணி பாலாஜி கலந்து கொண்டு, மாணவிக்கு உதவித்தொகை மற்றும் மிதிவண்டியை வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கும், தினசரி பயண வசதிக்கும் இது பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.


மேலும் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் மோகன் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து செயல்படும் என்றும், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவுவது கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் கூறினார்.


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சுகந்தி மற்றும் வேலு ஆகியோர் மேற்கொண்டனர். இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆரோக்கிய சதீஷ், கமலநாதன், விஜய் கலையரசன், ஜெனிதா உள்ளிட்டோர், மகளிர் அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மாணவியின் குடும்பத்தினர், இந்த உதவிக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். இத்தகைய மனிதநேய நடவடிக்கைகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை உருவாக்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad