உலக எய்ட்ஸ் தினம் 2025-ஐ முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி (ICTC) பிரிவு சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவர் இ. மாலினி, இணை இயக்குநர் (நலப்பணிகள்), கள்ளக்குறிச்சி மாவட்டம் தலைமையேற்று நடத்தினார்.
பேரணியை திரு. பி. அசோகன், காவல் துறை கண்காணிப்பாளர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரு. கா. பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் மற்றும் வட்ட நிர்வாக நடுவர், உளுந்தூர்பேட்டை, மருத்துவர் மா. அன்புமணி (MD), முதன்மை குடிமை மருத்துவ அலுவலர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திரு. பி. நல்லதம்பி, மாவட்ட திட்ட மேலாளர், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு (விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்) கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு திரு. கா. தவிடன், தமிழ் ரியல் எஸ்டேட், உளுந்தூர்பேட்டை, ஸ்பான்சராக ஆதரவு வழங்கினார். மேலும், ரோட்டரி சங்க நிர்வாகிகள், முனைவர் கு. செல்வராஜ் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை), முனைவர் ஆர். குமரேசன் (ஸ்ரீ விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி), மருத்துவர் ந. அன்பு (ஜவர்கலால் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், பாலி), முனைவர் பிருந்தா (ஜவஹர்லால் நேரு பெண்கள் கலைக் கல்லூரி, பாலி), மருத்துவர் ஏ.ஆர். தங்கதுரை (நிறுவனர், சாய் அப்போலோ சமுதாய கல்லூரி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் ஐந்து கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். நிகழ்ச்சிக்கு ARM தொண்டு நிறுவனம், TPWN+டி தொண்டு நிறுவனம், SAATHI தொண்டு நிறுவனம் ஆகியவை ஒத்துழைப்பு வழங்கின.
நிகழ்ச்சியின் நிறைவில் ஐ.சி.டி.சி ஆய்வு நிபுணர் அ. சரவணன் மற்றும் பால்வினை நோய் பிரிவு ஆலோசகர் ஆ. புவனா நன்றியுரை வழங்கினர். இந்த விழிப்புணர்வு பேரணியை அ. ராஜன், ஐ.சி.டி.சி ஆலோசகர் ஒருங்கிணைத்தார்.

No comments:
Post a Comment