ஆகஸ்ட் 17 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு என்ற தலைப்பில் நடைபெற உள்ள மகளிர் மாநாடு குறித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஆற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ப.பிரபு என்கிற பிரபாகரன் தலைமை தாங்கினார், மண்டல செயலாளர் சோ.தமிழ், துணைச் செயலாளர் ஆ.கோ.வெற்றி வளவன், மாவட்ட பொருளாளர் சம்பத், மாநிலத் துணைச் செயலாளர் பாபு, மாநிலத் துணைச் செயலாளர் சிறுத்தை சரவணன், ஆற்காடு தொகுதி செயலாளர் சின்னையன் மாவட்ட மகளிர் அணி தலைவி மங்கையர்க்கரசி,மாநில இலக்கிய அணி பொறுப்பாளர் கவியரசு, உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் மகளிர் மாநாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment