கடந்த 03.08.2024 அன்று தஞ்சாவூரில் உலக அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1000க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வருட வருடம் நடைபெறுகின்ற இந்த நிகழ்வில் இந்த வருடமும் இந்திய அளவில் அனைத்து மாணவரும் கலந்து கொண்டது பெருமிதம் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.
அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பாக 7 மாணவர்கள் கலந்து கொண்டு 5 பேர் முதலிடமும் 2 பேர் இரண்டாம் இடமும் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். தலைமை பயிற்சியாளர் G.k. ஐயப்பா, N. அண்ணாமலை A. சக்திவேல், M. விக்கி, ஜான் வின்சென்ட் ராஜ், நாகராஜ், வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி மகிழ்வித்தனர்
முதலிடம் பிடித்த மாணவர்கள்.
1.A. ஆல்வின்
2.S.யோகாப்ரியன்
3.M.அன்புச்செல்வன்
4.P.மதன்
5.S.N.மோனிகா
இரண்டாம் இடம் பிடித்தவர்கள்
1.R.ஜனனி
2.S.சாய் பிரசன்னா .
இந்த நிகழ்வை துபாயிலிருந்து தமிழக குரல் நாளிதழ் தமிழக குரல் தொலைக்காட்சியின் நெறியாளர் kamalkvl அனைவருக்கும் வாழ்த்துரை காணொளி மூலமாக அனுப்பி வைத்திருந்தார் இந்த நிகழ்வில் துபாயில் இருந்து சென்றிருந்த ஏராளமாக துபாயில் வாழ்கின்ற தமிழர்களும் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment