கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்து சில மாதங்களுக்கு முன்பு ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டவர் மகேஸ்வரி. இவர் பொறுப்பேற்ற நாள் முதல் லஞ்சம் பெறுதல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து கொண்டு புகார் கொடுக்க வருபவர்களை மிரட்டுதல் போன்ற இவர் மீது பல்வேறு புகார்கள் மாவட்ட காவல் துறைக்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியிடம் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை அடுத்து அவர் மீது பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் நிரூபணம் ஆனதால் ஆய்வாளர் மகேஸ்வரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எஸ்பி பரிந்துரைத்தார். இதன்பெயரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி திசா மீட்டல் ஆய்வாளர் மகேஸ்வரியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment