கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூக்கி அடிக்கப்பட்ட 11 தாசில்தார்கள்.. கலெக்டர் அதிரடி உத்தரவு! - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 13 July 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூக்கி அடிக்கப்பட்ட 11 தாசில்தார்கள்.. கலெக்டர் அதிரடி உத்தரவு!


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 66 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அங்கு தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


வட்டாட்சியர்கள் மாற்றம் விவரம் வருமாறு:

  1. கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராக இருந்த சசிகலா, சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த கோபாலக்கிருஷ்ணன் சங்கராபுரம் தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
  3. சங்கராபுரம் தனி வட்டாட்சியராக இருந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி தனி வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த அனந்தகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
  5. உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக இருந்த விஜயபிரபாகரன், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  6. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த பாலகுரு, வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
  7. வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த குமரன், கள்ளக்குறிச்சி அலுவலக மேலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  8. கள்ளக்குறிச்சி அலுவலக மேலாளராக இருந்த அனந்தசயனன், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியாராக (ஆலய நிலங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்
  9. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியாராக (ஆலய நிலங்கள்) இருந்த மனோஜ் முனியன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
  10. சின்ன சேலம் வருவாய் வட்டாட்சியராக இருந்த கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக இருந்த பிரபாகரன், கள்ளக்குறிச்சி (வன நிர்ணய அலுவலகம்) தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த பணி மாறுதல்கள் குறித்து எந்தவித மேல்முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், புதிய பணி இடத்தில் உடனடியாக சேரவில்லை என்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad