கடந்த சில நாட்களாக, கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வடதொரசலூர் கிராமத்தில் சிலருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதில், 7 வயது சிறுவன் குபேரன், சுபானி, வெற்றிவேல், பிரபாவதி, கலைவாணன் மற்றும் திவ்யா ஆகியோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டது, தெரியவந்ததையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதனிடையே, தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர், கடந்த 3 ஆம் தேதி மருத்துவ முகாமிட்டு, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேர் உள்பட 10 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
No comments:
Post a Comment