கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்து 65 பேர் பலியானார்கள். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் அவர்கள் இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தண்ணீரில் கலந்த மெத்தனால் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தி வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். அதேபோல் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் கல்வராயன்மலையில் போலீசார் முகாமிட்டு சாராய வியாபாரிகளை கைது செய்து வருகிறாா்கள்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலு என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள வேலு, மாதேஷிடம் விஷ சாராயம் வாங்கி சேஷசமுத்திரம் பகுதியில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷ சாராய வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment