கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வின் தொடக்கமாக கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு புதிய தலைவராக செந்தில்குமார், செயலாளராக கோத்தம்சந்த், பொருளாளராக சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.
இறுதியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆலூர் அரசு பள்ளிக்கு எல்இடி டிவி ஒன்றும், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கணவர் இல்லாத 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment