கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு செய்தியாளர்கள் பாராட்டு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 8 June 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு செய்தியாளர்கள் பாராட்டு.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குபதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை இரண்டையும் திறம்பட நடத்தி முடித்த மாவட்ட ஆட்சியருக்கு செய்தியாளர்கள் சார்பில் பாராட்டுக்கள், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அன்று நடைபெற்ற வாக்குபதிவின் போது இதுவரை இல்லாத அளவில் கல்வராயன்மலை மற்றும் ஏற்காடு  மலைப்பகுதிகள் உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவீதத்தை துல்லியமாக வழங்கியது.

இதுவரை எந்த மாவட்டத்திலும் மேற்கொள்ளாத வகையில் வாக்கி டாக்கி முறையை பயன்படுத்தி அதிகாரிகளிடம் வாக்குப்பதிவு குறித்த விபரங்களை கேட்டு அறிந்து அதனை துல்லியமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டது, அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் மையப் பகுதியான வாசுதேவனூர் பகுதியில் வாக்கு எண்ணும் மையத்தை அமைத்தது.


இதுவரை இல்லாத வகையில் வாக்கு எண்ணும் மையத்தில் தண்ணீர் வசதி, உணவு வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சிறப்பான முறையில் மேற்கொண்டது, வாக்குப்பதிவை போல் வாக்கு எண்ணிக்கையின் போதும் அது தீவிர தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடனுக்குடன் சுற்றுகளின் நிலவரங்களை அறிவித்து தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் வாக்கு எண்ணும் பணியினை துரிதமாக நடத்தி முடித்தது.


கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நடைபெற்ற இந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அவர்களுக்கு  கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்கள்  மனமார்ந்த  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

Post Top Ad