சின்னசேலம் அருகே மனைவியை கொன்று புதைத்த ஹிட்டாச்சி டிரைவர் தற்கொலை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 8 June 2024

சின்னசேலம் அருகே மனைவியை கொன்று புதைத்த ஹிட்டாச்சி டிரைவர் தற்கொலை.


வேப்பூரைச் சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் சக்திவேல் இவரது மனைவி சுவேதா, இவர் பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர், சம்பவத்தன்று சின்னசேலம் அருகே வி.அலம்பளம் கிராம ஏரியில் மனைவி சுவேதாவை அடித்து கொலை செய்து மண்ணில் புதைத்துவிட்டு பின்னர் உறவினருக்கு தான் மனைவியை அடித்து கொலை செய்து மண்ணில் புதைத்த இடத்தை குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மற்றும் சின்னசேலம் தாசில்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண்ணில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்தனர், மேலும் அருகில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்த சக்திவேலின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மனைவியை அடித்துக் கொலை செய்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் சின்னசேலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad