கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக சேவகர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது -மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷ்ரவன் குமார் தகவல். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 June 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக சேவகர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது -மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷ்ரவன் குமார் தகவல்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது பெண்aகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கபதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். 


இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
 

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இவ்விருதிற்கு தமிழக அரசின் விருதுகள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் இறுதி நாளைக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad