திருக்கோவிலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 29 May 2024

திருக்கோவிலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மகன் இரமேஷ்(54) என்பவர் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தொடர்பாக திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவுசெய்து குற்றவாளி இரமேஷ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்பு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


மேற்கண்ட குற்றவாளியின் நடவடிக்கை பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதகமான நடவடிக்கையில் இருக்க கூடும் என்பதாலும், பிணையில் விடப்பட்டு வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு,  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கடலூர் மத்திய சிறையில் உள்ள குற்றவாளியை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை சார்வு செய்தார்.


மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad