சின்ன சேலம் அம்சாகுளம் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாமரத்தாயி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 9 June 2024

சின்ன சேலம் அம்சாகுளம் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாமரத்தாயி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அம்சா குளம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாமரத்தாயி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் இன்று காலை 8 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக இன்று காலை முதலே யாகசாலை அமைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் சின்ன சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

இதனை தொடர்ந்து கோபுரத்தின் உச்சியில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது கலச புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சின்ன சேலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சின்ன சேலம் சுற்றியுள்ள கிராம மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . 

No comments:

Post a Comment

Post Top Ad