கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று 12ம் தேதி புதன் கிழமை நடைபெற உள்ளது இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார்.
இதில் நாளை வடக்கனந்தல் உள்வட்டம் கிராமங்களான எடுத்தவாய்நத்தம், மண்மலை, செல்லம்பட்டு, கரடி சித்தூர் வடக்கு, தெற்கு, சாவடிபட்டு, மாதவச்சேரி வடக்கு, தெற்கு, கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 50 ரூபாய் பத்து ரூபாய் 12ஆம் தேதியும் பால்ராம்பட்டு, மாத்தூர், வடக்கனந்தல், கிழக்கு, மேற்கு, கச்சிராயபாளையம், பரியம், ஏர்வாய் பட்டினம், பொட்டியம், மல்லியம்பாடி 13ம் தேதி வியாழக்கிழமையும், நைனார்பாளையம் உள் வட்டம் கிராமங்களான நயினார்பாளையம், அனுமந்தல், கீழ்குப்பம், வி. மாமந்தூர், கருந்தலாகுறிச்சி, வி. கிருஷ்ணாபுரம், குரால், காளசமுத்திரம், தாகம் தீர்த்தபுரம், கூகையூர், வீரபயங்கரம், நல்லசேவிபுரம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையும், பாக்கம்பாடி, தென் சிறுவள்ளூர், செம்பாக்குறிச்சி, தோட்டப்பாடி, பெத்தா சமுத்திரம், தத்தா திரிபுரம், கருங்குழி, ஈரியூர், அமகளத்தூர், 18ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றும்,சின்னசேலம் உள்வட்டம் கிராமங்களான கடத்தூர், செங்கியாநத்தம், எளியத்தூர், பைத்தந் துறை, தொட்டியம், தென்செட்டியந்தல் வெட்டி பெருமாள் அகரம், மறவாநத்தம், பாதரம்பள்ளம், ராயப்பனூர், மேல் நாரியப்பனூர், தென் பொன்பரப்பி, தகரை, கல்லாநத்தம், 19ஆம் தேதி புதன்கிழமையும் பாண்டியன் குப்பம், திம்மாபுரம், தகரை, எலவடி, பூசப்பாடி, அமையகரம், மூங்கில் பாடி, பூண்டி, வாசுதேவனூர், சின்னசேலம்,வடக்கு, தெற்கு 20ம் தேதி வியாழக்கிழமையும் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி பயன்பெறலாம். இந்த தகவலை சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment