கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் 2.77 லட்சம் ரூபாய்க்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 June 2024

கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் 2.77 லட்சம் ரூபாய்க்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.


கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி வார சந்தை நடந்தது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 357 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பஞ்சு குறைந்தபட்சம் 7,162 ரூபாய்க்கும், அதிகபட்சம் 8,069 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 2 லட்சத்து 77 ஆயிரத்து 664 ரூபாய்க்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது என, கமிட்டி செயலாட்சியர் செந்தில் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad