கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு அரசு பேருந்து தடம் எண் 187 இயக்கப்பட்டு வந்தது வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு, சிதம்பரம் வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் அந்தப் பேருந்து திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். தற்போது அந்த வழித்தடத்தில் பேருந்து மீண்டும் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆகவே தமிழக அரசும் போக்குவரத்து கழகமும் விரைந்து அந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து திருக்கோவிலூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் பேருந்து எண் 187 உடனடியாக இயக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஏ.பசல் முஹம்மது கோரிக்கை வைத்துள்ளார்.
No comments:
Post a Comment