கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு அருகில் அஹலே சுன்னத் ஜமாத் சார்பில் புதிதாக பள்ளிவாசல் கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் பள்ளிவாசல் திறப்பு விழாவை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் முடிவு செய்து அதற்கான அழைப்புகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அஹலே சுன்னத் ஜமாத் தலைவர் கலைமான் தலைமையில் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் உலகளந்த பெருமாள் கோவிலின் ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிக்கு பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கான அழைப்புகளை நேரில் சென்று வழங்கினர்.
இதில் ஜமாத் செயலாளர் அப்துல் ரஷீப், பொருளாளர் ஆதம் ஷபி, தமுமுக மாவட்ட தலைவர் பசல் முகம்மது மற்றும் ஜமாத் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ப.பாலமுருகன் திருக்கோவிலூர்
No comments:
Post a Comment