தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாண்டுகள் சிறை தண்டனை அடைந்த திருக்கோவிலூர் முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி தமது பதவியை இழந்து உள்ளதால் திருக்கோவிலூர் தொகுதியில் காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலர் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து இரண்டு லாரிகளில் திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக த்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்ப ட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில்லாரியில் இருந்த சீல் பிரிக்கப்பட்டு அதிலிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ப.பாலமுருகன் திருக்கோவிலூர்.
No comments:
Post a Comment