பகண்டை கூட்டு சாலையில் பாஜக சார்பில் மக்களிடம் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களாக பெறும் நிகழ்ச்சி - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 March 2024

பகண்டை கூட்டு சாலையில் பாஜக சார்பில் மக்களிடம் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களாக பெறும் நிகழ்ச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ள பகண்டை கூட்டு சாலை மும்முனை சந்திப்பில் பாஜக சார்பில் மக்களிடம் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களாக பெறும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட பொது செயலாளர் வழக்கறிஞர் கே.சி.ஜெயதுரை தலைமையில் கடந்த திங்களன்று  நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பெறப்படும் மனுக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து சுமார் 150 மனுக்கள் தேர்தல் வாக்குறுதி பேட்டியின் வாயிலாக பெறப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இதில் விவசாய அணி மாவட்ட பொருளாளர் துரைமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்  சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ராஜதுரை (தகவல் தொழில்நுட்ப பிரிவு), ஒன்றிய பொதுச்செயலாளர் செந்தில்.  மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


இந்நிலையில் நிகழ்ச்சி நடந்த இடத்தில தேர்தல் வாக்குறுதி பெட்டி  மற்றும் விளம்பர பேனர் வைத்தாகவும்  நேற்று இரவு நேரம் என்பதால்  தேர்தல் வாக்குறுதி பெட்டியை எடுத்து பாஜகவினர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடந்த இடத்தில் வைக்கப்பட்ட  பேனரை வருவாய் துறையினர் எந்த முன்னறிவிப்பும் இன்றி அகற்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் தலைகீழா இருக்கும் படி வைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும், இதை கண்ட பாஜக நிர்வாகி வருவாய் துறையினரிடம் கேட்டபோது .அவர்கள் தகாத வார்த்தைகளால்  திட்டியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறி பாஜக நிர்வாகி வருவாய் துறையினர் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad