சங்கராபுரம் வாசவி திருமண மண்டபத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடமாடும் வேன் மூலமாக மளிகை, பேக்கரி, ஸ்வீட், மற்றும் ஹோட்டல் கடை ஆகியவற்றில் உள்ள உணவுப் பொருட்களின் மாதிரி சாம்பிள் பாக்கெட் எடுக்கப்பட்டது இந்நிகழ்விற்கு மளிகை பிரிவு பி.ஏ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஹோட்டல் பிரிவு நா.சுதாகரன், ஸ்வீட் காரம் பிரிவு சத்யா சீனு, அனைத்து வியாபாரிகள் சங்க துணை செயலாளர் நாசர் முன்னிலை வகித்தார்.மாவட்டம் மருத்துவர் வணிகர் சங்க பொருளாளர் இரா.முத்து கருப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ஜி.குசேலன் ஆகியோர் நிகழ்வினை தொடங்கி வைத்தனர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சண்முகம் மற்றும் ஆய்வாளர் சரவணன் உணவுப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும் அருணா சங்கர், அசோக், ஆர்.வி.சீனு, விஜயகுமார், பாலாஜி, ராஜேஷ்,பிரகாஷ், தீனதயாளன், காதர், செந்தில், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக மளிகை பிரிவு ஜி. சீனிவாசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment