கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு என பிரத்தியேகமாக உதவி எண் மற்றும் வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 March 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு என பிரத்தியேகமாக உதவி எண் மற்றும் வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் 24X7 என்ற சுழற்சி முறையில் காவல் ஆளிநர்களைக் கொண்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு என பிரத்தியேகமாக உதவி எண் மற்றும் வாட்ஸ்அப் எண் 9884510097 வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் சமூக வலைதளங்களில் தேர்தல் சம்பந்தமாக வதந்தி செய்திகள், தவறான தகவல்களை சமூக ஊடகங்களின் வழியாக பரப்புபவர்களை பற்றிய தகவல்களையும் தெரிவிக்கலாம்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடைபெறவும், வாக்காளர்கள் அனைவரும் 100% சதவிகிதம் வாக்களிக்கவும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா கேட்டுக்கொண்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad