கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 22 March 2024

கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் S.பிரகாஷ் மற்றும் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் S.திலீபன் ஆகியோர்களின் ஏற்பாட்டில் இன்று கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை, மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க. கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன்,மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J.மணிகண்ணன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர், தே.மலையரசன் அறிமுகப்படுத்தி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டும் என்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.


இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட, நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad