வாசுதேவனூர் மகாபாரதி பொறியில் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 March 2024

வாசுதேவனூர் மகாபாரதி பொறியில் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.


கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாசுதேவனூர்  மகாபாரதி பொறியில் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, கங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு என்னும் எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குகள் என்னும் அறை ஆகியவற்றை பார்வையிட்டார். 


மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் வந்து செல்லும் பகுதி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்லும் பகுதி என தனித்தனியே அமைக்கப்பட உள்ள வழித்தடங்களையும் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து காலம் தாழ்த்தாமல் விரைந்து பணிகளை முடித்திட அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கர், ரமேஷ், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் ஹேமா மற்றும் 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad