சின்னசேலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 22 March 2024

சின்னசேலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்.


கள்ளக்குறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகேயுள்ள இராயப்பனூர் பகுதியில்  தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் முருகன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து நிலையான கண்காணிப்புக்கு குழு அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியருமான லூர்து ராஜீ-யிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad