இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பும் தண்டனையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார். அவரை மீண்டும் அமைச்சராக்க வேண்டுமென்ற பரிந்துரையுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதனை ஏற்க மறுத்த ஆளுநர் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திதான் வைத்துள்ளது. ரத்து செய்யவில்லை. எனவே, அவருக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று குறிப்பிட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
பின்னர் உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை 3:00 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வித்துறையே ஒதுக்கப்பட் டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
- தமிழ குரல் திருக்கோவிலூர் தாலுகா செய்தியாளர் ப.பாலமுருகன்
No comments:
Post a Comment