சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்மசாலைக்கு ரோட்டரி கிளப் சார்பாக சமையல் பாத்திரங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 March 2024

சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்மசாலைக்கு ரோட்டரி கிளப் சார்பாக சமையல் பாத்திரங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா.


சங்கராபுரம் கல்லை மெயின் ரோட்டில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய தரும சாலைக்கு சங்கராபுரம் ரோட்டரி கிளப் சார்பாக சமையல் பாத்திரங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா (15-3-2024) வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணி அளவில் சங்கராபுரம் ரோட்டரி கிளப் தலைவர் டி.நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள் இராம. முத்து கருப்பன், பி. ஏ. ராஜேந்திரன்,  ஏ.வி.ராஜப்பா,எம்.அருணாசலம், கே. கோபால், என்.எஸ்.ஆர். செந்தில்குமார், டி.பி. சந்திரசேகரன், மூர்த்தி, திருநாவுக்கரசு, சௌந்தரராஜன், வெங்கடேசன், ஆர்.வி. ஜனார்த்தனன், சாப்ஜான், ரகுநந்தன், பலராமன், சுரேஷ், ஆறுமுகம், சுதாகரன், ஜோசப் சீனிவாசன், கே.ஜி. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு ரோட்டரி கிளப் செயலாளர் என் கோபிநாத் வரவேற்புரை ஆற்றினார்.


மேலும் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா மணி துரைதாகப்பிள்ளை, வடசெட்டியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி மணிவண்ணன், சங்கராபுரம் இன்னர் வீல் கிளப் கௌரி விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


 சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்மசாலைக்கு ரூபாய் 13,000 மதிப்புள்ள பாத்திரம் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் கே.கோபால் மற்றும் உடனடி முன்னாள் தலைவர் கே.ஜி.சீனிவாசன் ஆகியோர் வழங்கினார்கள்.


 விழா முடிவில் ரோட்டரி கிளப் பொருளாளர் ஏ.ஆர்.ஷங்கர் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad