சங்கராபுரம் நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட வாணாபுரம் வட்ட வருவாய் கிராமங்களை தொடர்ந்து சங்கராபுரம் நீதிமன்ற ஆளுகையில் இருக்க வேண்டியும், திருக்கோவிலூர் நீதிமன்றத்திற்கு மலை பகுதியான புளியங்கோட்டை, மூங்கில்துறைப்பட்டு, மற்றும் வாணாபுரம் ஒட்டியுள்ள வருவாய் கிராமங்கள், திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் சேர்த்தால் பொதுமக்கள், வழக்காடிகள், வழக்கறிஞர்கள் பேருந்து வசதியின்றி சிரமப்படுவதோடு, பயண தூரமும், பயண செலவு, மற்றும் கால விரையமும் அதிகமாகும்.
வழக்கம்போல் வாணாபுரம் வட்ட வருவாய் கிராமங்களை சங்கராபுரம் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து நடைபெற்றிடவும் தமிழக அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அண்ணாமலை, பரமகுரு, பிரபாகரன், சுரேஷ்குமார், ரமேஷ் குமார், பாண்டுரங்கன், முகமது பாஷா, ஜனார்த்தனன், நெப்போலியன், தனசேகர், திருநாவுக்கரசு, கதிரவன், குமார், சுரேஷ்பாபு, தாமரைச்செல்வன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர், ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் பரமசிவம் நன்றி கூறிய கூறினார்.
No comments:
Post a Comment