திருக்கோவிலூரில் குறிஞ்சி கபிலருக்கு நினைவுத்தூண் மக்கள் மகிழ்ச்சி. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 8 March 2024

திருக்கோவிலூரில் குறிஞ்சி கபிலருக்கு நினைவுத்தூண் மக்கள் மகிழ்ச்சி.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை  ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கபிலர் குன்று. இது சங்ககால புலவர் கபிலர் வடக்கு இருந்து உயிர் துறந்த இடமாகும். இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றிப் பாடுவதில் தேர்ந்தவர். ஆகவே இவரை குறிஞ்சி கபிலர் என்றும் அழைப்பர். எனவே இவரை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கபிலர் குன்றுக்கு அருகில் கபிலர் நினைவுத்தூண் அமைத்து அதை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். 

அதையொட்டி திருக்கோவிலூரில் அமையப்பெற்ற கபிலர் நினைவுத் தூணுக்கு நகராட்சி ஆணையர் கீதா நகர் மன்றத் துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா  தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் சுரேஷ் ஆகியோர் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.


- திருக்கோவிலூர் தாலுகா செய்தியாளர் ப.பாலமுருகன்.

No comments:

Post a Comment

Post Top Ad