கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ நகர் அம்மா மினி ஹாலில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாநில தலைவர் டாக்டர் ஆ.இரா.விஜயஷங்கர் அவர்கள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. மாநில துணை தலைவர் எஸ்.பி.ராம்குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எஸ். கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.பிரபு, மாநில பொருளாளர் ஆர். அரவிந்தன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் புதிய கிளை துவக்கம், புதிய பொறுப்பாளர்கள் சேர்க்கை, மூத்த பத்திரிக்கையாளர் கௌரவித்தல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடந்தது.
இதில் நகர்மன்ற தலைவர் டி.என். முருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகமூர்த்தி, திமுக நகர அவைத்தலைவர் குணா, அதிமுக நகர செயலாளர். சுப்பிரமணியன், தொழிலதிபர். டி.ஜி.கணேஷ், அதிமுக வழக்கறிஞர் உமாசங்கர் உள்ளிட்ட திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள் திருக்கோவிலூர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment