கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண் காவல்துறையினருக்கு பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்த சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 4 September 2023

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண் காவல்துறையினருக்கு பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்த சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் மாவட்டத்தில் உள்ள பெண் காவல்துறையினருக்கு பாலியல் குற்ற வழக்குகள் குறித்து சட்டம் சார்ந்த ஒரு நாள் பணியிடைப் பயிற்சி அளிக்கபட்டது.

இந்த சட்டம் சார்ந்த விழிப்புணர்வு கூட்டரங்கில் காவல்துறையினருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்குகளில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) கடைபிடித்து பாதிக்கப்பட்வருக்கு எவ்வாறு நம்பிக்கை அளிக்கலாம் என்றும் பாலியல் சம்மந்தமான வழக்குகளில் காவல்துறையினரின் பங்கீடு மற்றும் முக்கியத்துவம், செய்யவேண்டியவைகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகைகள் பெற்றுதருவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருமேனி மூன்று உட்கோட்ட அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள், 30 பெண் காவலர்கள் கலந்துகொண்டு இப்பயிற்சியினை பெற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad