முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாககூறி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சார்பாக விசிகவினர் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வேல்.பழனியம்மாள் தலைமை வகித்தார். கடலூர் - கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர் சவூதி, ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி தினமலர் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் தொடர்ந்து தமிழக அரசை கொச்சைபடுத்தும் தினமலரை தடை செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர் முழக்கங்கள் எழுப்பினர். மாவட்ட துணை செயலாளர் திராவிட சந்திரன், பால்.குமார், இளங்கோ, பூவன் சண்முகம், பெரியார் சசி, பாஸ்கர், திராவிட வசந்தன், கோபி.பிரசாந்த், ஓவியரனி கிள்ளிவளவன், ஆட்டோ மகா, ஆட்டோ குமரவேல், மாயா அரவிந்தன், ரவி, திராவிட கழக மாவட்ட தலைவர் தோழர் பிரபு மற்றும் திராவிட கழக அமைப்பின் தோழர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
முன்னதாக நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment