அந்த 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாணாபுரம் தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி அன்று திமுக இளைஞர் அணி தலைவரும்,இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் துவங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகண்டை கூட்டு சாலையில் உள்ள வட்டார சேவை மைய அலுவலகத்தில் தற்காலிகமா இயங்கி வந்தது,இந்த அலுவலகத்தில் போதுமான இடவசதி இல்லாததால் பகண்டை கூட்டு சாலை பகுதியில் அமைந்துள்ள ஜான் போஸ்கோ தனியார் பள்ளிவளாகத்தில் உள்ள கட்டிடத்தை தேர்வு செய்து கடந்த ஒன்றரை மாதங்களாக பல்வேறு பணிகள் மேற்கொண்டு இறுதியாக பெயிண்ட் அடிக்கும் பணி நிறைவு செய்து பிரம்மாண்ட பந்தல் அமைத்து விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இப்படி சிறப்புமிக்க வரலாற்று மிக்க புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை நாதஸ்வரம் இசைக்க மங்கள இசையுடன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார், இதனைத் தொடர்ந்து புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாட்டை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் கடந்த ஒன்றரை மாதம் காலமாக திமுகவினர் முழுவீச்சியில் ஈடுபட்டனர்,ஆகவே ரிஷிவந்தியம் தொகுதியில் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டதால் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.
No comments:
Post a Comment